தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் இணைத்து, ஒரே விசாரணை அமைப்பு மூலம் விசாரிக்க உத்தரவிட கோரி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சர்ஜீல் இமாம் தாக்கல் செய்த மனு தொடர்பாக, பதில் அளிக்க டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர் சர்ஜீல் இமாம் மீது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் மீது அசாம், டெல்லி மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.