இந்தியா முழுவதும் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று, டெல்லி தேவி ஆலயத்தில் காலை சிறப்பு ஆரத்தி நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பக்தர்கள் தரிசனம் செய்து அன்னையின் அருளைப் பெற்று சென்றனர்.