மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர் தாலுக்கா பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், 65 வயது முதியவர் ஒருவர், சிறுமியை உணவு வாங்கித் தருவதாக கூறி கால்நடை கொட்டகை அருகே அழைத்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிசிடிவி ஆதாரங்கள் அடிப்படையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கூறப்படும் முதியவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.