இந்தியா

5 அடுக்கு குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் தவிப்பு

மகாராஷ்டிராவில் 5 அடுக்கு குடியிருப்பு இடிந்து விழுந்ததில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 80க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மஹாட் நகரின் கஜல்புரா பகுதியில் உள்ள ஒரு 5 அடுக்கு மாடி குடியிருப்பு நேற்றிரவு 7 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. 35 குடியிருப்புகள் கொண்ட அந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 80க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள 80க்கும் மேற்பட்டோரை காப்பாற்ற தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மும்பையிலிருந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படை இயக்குனரிடம் தொலைபேசி மூலம் பேசி, வேண்டிய உதவிகளை செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இடிபாடுகளில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திப்பாக அமித்ஷா தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்