நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தினை தொடங்கி வைப்பதற்காக கொல்கத்தா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு இரண்டு பேரணிகளில் கலந்து கொண்டார். தாக்கூர் நகர் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி பெண்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் துர்காபூர் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முறையான ஏற்பாடுகள் செய்யத் தவறியதற்கு, மன்னிப்பு கோரினார்.