கேரள மாநிலம், கொல்லம் பகுதியை சேர்ந்த 72 வயது சாவித்திரி என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இது குறித்து, அவரின் மகள் லாலி, காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். சாவித்திரியின் மகன் சுனில் குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், அவரை அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அப்போது தான், பெற்ற தாயை மகனே கொலை செய்து புதைத்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மதுப்பழக்கம் கொண்ட சுனில், அவ்வப்போது பணத்துக்காக தாயை தாக்கி வந்த நிலையில், சம்பவத்தன்றும் தாக்கியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக தாய் இறந்த போக, நண்பரின் உதவியுடன் அவரை வீட்டு வளாகத்தில் புதைத்துள்ளார். இதையடுத்து சுனில்குமார் மற்றும் அவரது நண்பரையும் கைது செய்த போலீசார், புதைக்கப்பட்ட சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர்.