கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை விசாரித்து வருகிறது. இதனிடையே, சிவசங்கர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், ஸ்வப்னா சுரேஷிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்து, காவலில் எடுக்க மனு செய்த அமலாக்கத்துறைக்கு கொச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, வழக்கில் மேலும் 5 பேரை குற்றவாளிகளாக சேர்த்த என்.ஐ.ஏ., மலப்புரம் வந்தூரில் வசிக்கும் முகமது அப்சல் உள்பட மேலும் 5 பேர் மீது, என்ஐஏ வழக்கு பதிவு செய்தது. இதில், நான்கு பேர் ஐக்கிய அமீரகத்தில் உள்ளதால் இண்டர்போல் உதவியுடன் கைது செய்யவும் என்.ஐ.ஏ. முடிவு செய்துள்ளது. மொத்தம் 35 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் 21 பேர் கைதாகி உள்ளனர்.