Jammu Kashmir | Land Slide | முக்கிய சாலையில் சரிந்து விழுந்த ராட்சத பாறைகள் | உயிரை கையில் பிடித்து கடக்கும் மக்கள் ஜம்முவில் நிலச்சரிவு - தோடா-கிஷ்த்வார் சாலை மூடல் ஜம்மு காஷ்மீரின் தோடா (Doda) மாவட்டத்தில் உள்ள புல் தோடா அருகே இருக்கும் கட்சூ (Gatsoo) பகுதியில் அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியின் முக்கிய போக்குவரத்து பாதையான தோடா-கிஷ்த்வார் (Doda-Kishtwar) தேசிய நெடுஞ்சாலை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக ராட்சத பாறைகளும், மண்ணும் சாலையை மூடியுள்ளதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதுடன் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லைப் பாதுகாப்பு சாலை அமைப்பினர் (BRO) மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் மீட்பு பணிகளை தொடங்கியுள்ளனர்.