இந்தியா

"மோடி இதை செய்யாமல் விட்டிருந்தால் சித்தராமையா உயிர் இருந்திருக்காது"

தந்தி டிவி

#PmModi | #Siddaramaiah

"மோடி இதை செய்யாமல் விட்டிருந்தால் சித்தராமையா உயிர் இருந்திருக்காது" - KGF பாஜக எம்பி பேச்சால் அதிர்ச்சி

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பிரதமர் மோடி இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்காவிட்டால், அவர் உயிருடனே இருந்திருக்க மாட்டார் என கோலார் எம்.பி. முனுசாமி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோலார் தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் மல்லேஷை ஆதரித்து தற்போதைய பாஜக எம்.பி. முனுசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, சித்தராமையாவுக்கு பிரதமர் மோடி இலவசமாக கொரோனா தடுப்பூசியை போட்டிருக்காவிட்டால், தற்போது சித்தராமையா உயிருடனே இருந்திருக்க மாட்டார் என்று கூறினார். கர்நாடகாவில் சித்தாராமையா, டி.கே.சிவகுமார் மட்டுமல்ல, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கும், பிரதமர் மோடிதான் இலவசமாக கொரோனா தடுப்பூசியை போட்டார் என்றும், வளர்ந்த நாடுகளில் கூட கொரோனா தடுப்பு ஊசிக்கு பணம் வசூலிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இலவசமாக வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அதை மறந்து காங்கிரஸ் கட்சியினர் உத்தரவாதம் பற்றி பேசுகிறார்கள் என்றும் அவர் விமர்சித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்