இந்தியா

பெற்றோர்களே..! ``4 வயதுக்கு மேல்... குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்..''

தந்தி டிவி

கேரளாவில் இருசக்கர வாகனங்களில் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

கேரளாவில் இருசக்கர வாகனங்களில், 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு அவர்களது வயதுக்கு ஏற்ப கார்களின் பின் இருக்கையில் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்தில், காரின் முன் இருக்கையில் தாயின் மடியில் அமர்ந்திருந்த

2 வயது குழந்தை ஒன்று, ஏர்பேக் அமுக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிக்க கேரள மோட்டார் வாகனத்துறை இந்த உத்தரவை பிறபித்துள்ளது. கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு வாகன ஓட்டுநர் தான் முழு பொறுப்பாகும் என்று கூறியுள்ளது.

இதை மீறுபவர்களுக்கு டிசம்பர் முதல் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்