ஓடும் காரில் இருந்து இறங்கியபடி நடனமாடும் 'கிகி சேலஞ்ச்', வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற நடன வீடியோக்களை பிரபலங்கள் பதிவிட்டு வரும் நிலையில், குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த ரிஸ்வானா என்ற பெண் ஒருவரும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஓடும் காரில் இருந்து இறங்கி அவர் நடனமாடும் வீடியோ, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.