கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் பொருட்கள் மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தது. இந்நிலையில், பொருட்கள் மற்றும் சேவை வரி அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறுவதை கொண்டாடும் விதமாக, ஜூலை 1ம் தேதியான இன்று, ஜிஎஸ்டி தினம் என கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொருட்கள் மற்றும் சேவை வரி எந்த விதமான சீர்திருத்தம் வந்தாலும், அதை எதிர் கொள்ள இந்தியா தயார் என்பதை ஜிஎஸ்டியின் ஓராண்டு நிறைவு காட்டுவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.