Funeral Rites | Father | உயிரோடு இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு.. லவ் மேரேஜ் செய்ததால் ஆத்திரம்
#Funeral #Father #Daughter #Love #Marriage
உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில், மாற்று சாதி இளைஞரைக் காதலித்து திருமணம் செய்த மகளுக்கு, உயிருடன் இருக்கும்போதே தந்தை இறுதிச்சடங்கு செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. 20 வயது நேகா சிங் என்ற இளம்பெண், பெற்றோர் சம்மதமின்றி நீதிமன்றத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த தந்தை, மகள் இறந்துவிட்டதாகக் கருதி பிண்டதானம் செய்துள்ளார்.