சீன எச்சரிக்கையை தொடர்ந்து அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திபெத்தில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து அங்கு பாயும் சியாங் ஆற்றில் செயற்கை ஏரி உருவாகியுள்ளது. இதனால் பிரம்மபுத்திரா ஆற்றில் 12 முதல் 13 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் வரும் அபாயம் உள்ளதாக சீன அரசு மத்திய அரசுக்கு தகவல் அளித்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அருணாச்சலப்பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது.