பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை சஞ்சிதா உகலே மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
30 வயதான சஞ்சிதா உகலே, மும்பை நலாசோபரா பகுதியில் உள்ள தனது வீட்டில் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சஞ்சிதாவின் வீட்டில் இருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் இதுவரை கைப்பற்றப்படவில்லை எனத் தெரிகிறது.
தற்கொலை செய்து கொள்வதற்கு வெறும் 18 மணி நேரத்திற்கு முன்புதான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துள்ளலான பாடல் ஒன்றிற்கு மிகவும் மகிழ்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது