இந்தியா

திருப்பதி - திருமலைக்கு மின்சார பேருந்துகள்"

திருப்பதி, திருமலை இடையே விரைவில் மின்சார பேருந்துகளை இயக்க, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நூறு மின்சார பேருந்துகளை வாங்க, அம்மாநில அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

திருப்பதி - திருமலைக்கு மின்சார பேருந்துகள்"

திருப்பதி, திருமலை இடையே விரைவில் மின்சார பேருந்துகளை இயக்க, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நூறு மின்சார பேருந்துகளை வாங்க, அம்மாநில அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஓய்.வி.சுப்பா ரெட்டி தலைமையில் இரண்டு ஆண்டுகள் பதவி காலத்துடன் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு, தன்னுடைய பதவி காலத்தை நிறைவு செய்தது. இந்த நிலையில் சுப்பா ரெட்டி தலைமையிலான அறங்காவலர் குழுவின் நிறைவு ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்டரங்கில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, திருமலை - திருப்பதி இடையே மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்றும், அதேபோல் மின்சாரத்தால் இயங்கும் டாக்ஸிகளை மட்டுமே இயக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்