இந்தியா

Dinathanthi | Bengaluru | Cooking Competition | 'தினத்தந்தி' நடத்திய சமையல் போட்டி கோலாகலம்

தந்தி டிவி

'தினத்தந்தி' நடத்திய சமையல் போட்டி கோலாகலம். பெங்களூரு நகரில் தினத்தந்தி நாளிதழ் சார்பில் நடந்த சமையல் போட்டியில் 50-க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் கலந்து கொண்டனர். சிறப்பாக நடைபெற்ற இந்த ஆரோக்கியம் நிறைந்த குடும்ப சமையல் போட்டியில் பாரம்பரிய சுவையுடன் கூடிய உணவு வகைகளையும், நவீன ஆரோக்கிய உணவுகளையும் தயாரித்து காட்சிப்படுத்தினர். இதில் குறைந்த எண்ணெய், இயற்கை பொருட்கள், சத்தான தானியங்களை பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகள் பார்வையாளர்களை கவர்ந்தன. இதேபோல, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுடசுட சமைத்த உணவுகளை ருசித்தனர். குடும்ப ஆரோக்கியத்தில் சமையலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்ச்சியில் சிறந்த உணவை தயாரித்துக் கொண்டு வந்த தலா 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்