Delhi | அறுவை சிகிச்சை மூலம் 49 கிலோ எடையை குறைத்த நோயாளி
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், 209 கிலோ எடையுடன் மிகை உடல் பருமன் மற்றும் தூக்கத்தில் கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 32 வயது நோயாளிக்கு பரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் அவரது எடை 49 கிலோ குறைந்து, சுமார் 160 கிலோவானது. சுவாசப் பிரச்சனையும் மேம்பட்டதால், இரவு நேரத்தில் பயன்படுத்தி வந்த சிபிஏபி கருவியின் தேவையும் நீங்கியது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்