இந்தியா

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு; அதிகரிக்கும் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியுள்ள நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தந்தி டிவி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக குறைய தொடங்கியுள்ள நிலையில், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 329 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்து 719 ஆக உயர்ந்து உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 436 பேர், தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 33 லட்சத்து 53 ஆயிரத்து 765 ஆக உள்ளது. மேலும், இதுவரை 18 கோடியே 44 லட்சத்து 53 ஆயிரத்து 149 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்