திரைப்பட விருது வழங்கும் ஐஃபாவுக்கு வழங்கப்பட்ட 700 கோடி ரூபாய் நிதியை, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மாற்றியுள்ளார். கொரோனா தடுத்து மக்களை காக்க வேண்டிய நேரத்தில், சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவுக்காக வழங்கப்பட்ட 700 கோடி ரூபாய், கொரோனா தடுப்புக்கு பேருதவியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். ஐஃபா நிகழ்ச்சியை 90 நாடுகளில் ஒளிப்பரப்ப திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.