இந்தியா

கொரோனா மரணம் - கொடியது

புதுச்சேரியில் கொரோனாவால் இறந்தவர் உடலை சவக்குழியில் தூக்கி வீசும் அவலம்

தந்தி டிவி
புதுச்சேரியில் கொரோனாவால் இறந்தவரின் உடலை, சவக்குழியில் தூக்கி வீசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி அனைவர் மனதையும் கனக்க வைத்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உடலை கையாள்பவர்கள், சரியான சுய பாதுகாப்பு கவசங்களை அணியாமல் இருந்தால் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றியும் கூட, புதுச்சேரியில் கொரோனாவால் இறந்தவரின் உடலை, சவக்குழியில் தூக்கி வீசும் வீடியோ வெளியாகி அனைவர் இதயத்தையும் கனக்க வைத்துள்ளது. 24 மணி நேரமும் கொரோனாவுக்கு எதிராக போராடி ஓய்வின்றி செயல்படும் முன்கள பணியாளர்களின் அலட்சியம் என்று குற்றம் சொல்ல இயலாது. இந்த காட்சிகள் நமக்கு உணர்த்தும் செய்தி கொரோனா மரணம் கொடியது என்பது தான். இதை பாடமாக எடுத்துக் கொண்டு, வைரஸ் பாதிப்பில் இருந்து முடிந்தவரை நம்மை தற்காத்து கொள்ள, நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தான் என மக்கள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு