இந்தியா

"அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொலை செய்ய சதி" டெல்லி அமைச்சர் அதிஷி பகிரங்க குற்றச்சாட்டு

தந்தி டிவி

"அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொலை செய்ய சதி" டெல்லி அமைச்சர் அதிஷி பகிரங்க குற்றச்சாட்டு

#kejriwal | #aravindkejrival | #thanthitv | #MinisterAdishi

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித் திட்டம் தீட்டப்படுவதாக, டெல்லி அமைச்சர் அதிஷி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்ச் 21 முதல், அரவிந்த் கெஜ்ரிவால் சர்க்கரை அளவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது என்றார். தனக்கு இன்சுலின் வழங்குமாறு சிறை நிர்வாகத்திடம் கேட்டும், சிறை அதிகாரிகள் இன்சுலின் கொடுக்க மறுத்துள்ளதாக குற்றம் சாட்டினார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிர்வாகம் இன்சுலின் கொடுக்காதது, கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதையே காட்டுகிறது என்று புகார் தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜகவால் தோற்கடிக்க முடியாது என்பதால், வீட்டில் சமைத்த உணவு அனுப்ப‌ப்படுவதை தடுக்க அமலாக்கத்துறை முயல்வதாகவும், அதன் காரணமாகவே உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்