இந்தியா

Congress | MLA | ஹரியானா டு ஹிமாச்சல் | எம்எல்ஏக்களை சிறப்பாக கவனிக்கும் காங்.

ஹரியானா டு ஹிமாச்சல் | எம்எல்ஏக்களை சிறப்பாக கவனிக்கும் காங்.

thanthitv

Congress | MLA | ஹரியானா டு ஹிமாச்சல் | எம்எல்ஏக்களை சிறப்பாக கவனிக்கும் காங். #congress #MLA #rajyasabhaelection #thanthitv ராஜ்யசபா தேர்தல் - காங்கிரஸின் சொகுசு விடுதி அரசியல் மார்ச் 16ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்கள் கட்சியினர் கட்சி மாறி வாக்களிப்பதை தடுப்பதற்காக ஒடிசா மற்றும் ஹரியானாவில் உள்ள தங்களது எம்எல்ஏக்களை வேறு மாநிலங்களுக்கு காங்கிரஸ் கட்சி அனுப்பி வைத்துள்ளது. ஒடிசாவில் காங்கிரசுக்கு 14 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அதில் எட்டு பேர் ஏற்கனவே பெங்களூரு வந்துவிட்டதாகவும், எஞ்சியுள்ள ஆறு எம்எல்ஏக்கள் விரைவில் பெங்களூரு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதைப்போல் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சிக்கு 37 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு மாற்றும் நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. பாஜகவினர் குதிரை பேரத்திற்கு பெயர் போனவர்கள் எனவும், இது போன்ற அச்சுறுத்தல்கள் இருப்பதால் காங்கிரஸ் கட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கர்நாடகாவின் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்

Breaking | Gold Rate | மாலையில் ஷாக்.. | மின்னல் வேகத்தில் எகிறிய தங்கம் விலை..

TN Election 2026 | மே 4ம் தேதி... திடீர் ஆலோசனையில் தலைமை தேர்தல் அதிகாரி