இந்தியா

"ரூ.25 லட்சம்.." - காங்.ன் பிரசார விளம்பரம் வெளியீடு

தந்தி டிவி

இந்தியாவில் இனி எந்த பெண்ணும் தங்கள் குடும்பத்தின் சிகிச்சை செலவுக்காக தாலியை அடகு வைக்க வேண்டிய நிலை இருக்காது என்று, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார விளம்பரத்தை வெளியிட்டு பேசிய அவர்,காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 25 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனால் இந்தியாவில் இனி எந்த பெண்ணும் தங்கள் குடும்பத்தின் சிகிச்சை செலவுக்காக தாலியை அடகு வைக்க வேண்டிய நிலை இருக்காது என்று, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒரே ஒரு மருத்துவக் கட்டண தொகை, ஆறு கோடிக்கு அதிகமான மக்களை வறுமையின் பிடியில் தள்ளி விடுவதாக குறிப்பிட்டுள்ளார்.பாஜக ஆட்சியில் மக்கள், விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சத்தை சந்தித்து வருவதாக கூறிய அவர், இந்தியா கூட்டணி அமைந்தால் நாட்டில் பொருளாதாரத்தை உயர்த்தி வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவோம் என்று ராகுல்காந்தி கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்