Rajasthan | Jaipur | ரிவர்ஸில் வேகமாக சென்ற கார்.. கோபத்தில் கற்களை வீசி தாக்கிய மக்கள்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மான்சரோவர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, தாறுமாறாக அதிவேகமாகப் பின்னோக்கிச் சென்றதால் பரபரப்பான சூழல் நிலவியது. அந்தக் காட்சிகளை பார்க்கலாம்... ப்ரீத்... மான்சரோவர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு பீதியடைந்த பொதுமக்கள், காரைத் துரத்திப் பிடிக்க முயன்றும், கற்களை வீசியும் அதை நிறுத்தப் போராடினர். இருப்பினும் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து முன்னோக்கிச் தப்பிய நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை; இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக உள்ள ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.