BREAKING || கூடலூரையே அலறவிட்ட மனித வேட்டையாடும் புலி - ஒருவழியாக சுற்றிவளைத்த வனத்துறை

கூடலூரையே அலறவிட்ட மனித வேட்டையாடும் புலி - ஒருவழியாக சுற்றிவளைத்த வனத்துறை

BREAKING || கூடலூரையே அலறவிட்ட மனித வேட்டையாடும் புலி - ஒருவழியாக சுற்றிவளைத்த வனத்துறை நீலகிரி கூடலூர் அருகே ஆட்கொல்லி புலியை சுற்றி வளைத்த வனத்துறையினர் ஓவேலியில் இரண்டு பேரை தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலி உதயன் என்ற கும்கி யானையின் உதவியோடு புலியை வனத்துறை நெருங்கி உள்ளதாக தகவல் வன கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசியோடு புலியை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கடந்த மாதம் 9-ம் தேதி ஒருவரையும் 21ம் தேதி ஒருவர் என இரண்டு பேரை புலி தாக்கிக் கொன்றது. ஒரே பகுதியில் இரண்டு பேரை தாக்கிக் கொன்ற புலியை பிடிக்க பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக புலியை உயிருடனோ அல்லது மயக்க ஊசி செலுத்தியோ பிடிக்க முதன்மை தலைமை வன பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்கரா உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com