இந்தியா

இந்தியாவை உலுக்கிய பெரும் அரசியல் தலைவர் கொலை -வெளியான அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

இந்தியாவை உலுக்கிய பெரும் அரசியல் தலைவர் கொலை -வெளியான அதிர்ச்சி தகவல்

மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தகவல்களை பரிமாறிக்கொள்ள Snap Chat செயலியை கொலையாளிகள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பாபா சித்திக், மும்பையில் கடந்த வாரம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக மூன்று பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரித்தனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மேலும் இரண்டு இளைஞர்களை மும்பை குற்றப்பிரிவு காவல் துறையினர் ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில், பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய குற்றவாளியின் அலைபேசியில் இருந்து பாபா சித்திக்கின் மகன் ஜீசான் சித்திக் படம் இருப்பதை காவல்துறையினர் விசாரணையில் கண்டறிந்துள்ளனர். குற்றவாளியின் அலைபேசிக்கு வேறு சில நபர்களால் Snap Chat செயலியின் மூலம் பகிரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கொலையாளிகள் மற்றும் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் அதுதொடர்பான விவரங்களை Snap Chat செயலியின் மூலம் பகிர்ந்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Actress Radha | செக் மோசடி பரபரப்பு புகார்.. ஆஜராகாத நடிகை ராதா

Gem Veeramani ``பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளம்’’ - ஜெம் வீரமணி வழக்கில் போலீஸ் பரபரப்பு தகவல்

Matrimony | TN Govt | வரன் தேடும் இளைஞர்கள், இளம்பெண்களே உங்களுக்காக.. அனுமதி வழங்கியது தமிழக அரசு

Cauvery River Issue | தொடங்கியது காவிரி நீர் ஒழுங்காற்று குழுக்கூட்டம்..நேரடியாக இறங்கிய அதிகாரிகள்

Karnataka Kaveri River Issue | Supreme Court | காவிரி விவகாரம் - கர்நாடக அரசுக்கு உத்தரவு