இந்தியா

ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழக சிலைகள் மீட்பது குறித்து ஆஸி தூதருடன் ஆலோசனை

ராஜராஜன் சோழன், லோகமாதேவி சிலைகளை மீட்டது போல, ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், ஆஸ்திரேலிய தூதர் சூசன் மற்றும் தூதரக அதிகாரிகள், தமிழ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில், தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு சொந்தமான சிலைகளை மீட்டது போல், ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருக்கும் தமிழக சிலைகள் மீட்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இன்று தமிழ் வளர்ச்சித் துறையின் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ள நிலையில் நேற்று இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஆஸ்திரேலியாவில் உள்ள 7 சிலைகளை ஒப்படைக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்