அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் அபாய அளவை தாண்டி ஓடும் வெள்ளத்தால் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை வெள்ளத்தில்சிக்கி 76 பேரும், மின்னல் தாக்கி 26 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டாயிரத்து 389 பேர் மீட்கப்பட்டு உள்ள நிலையில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு உள்ள 711 முகாம்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
========