இந்தியா

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி : சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 6 ரூபாய் 52 காசுகள் குறைத்துள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு 6 ரூபாய் 52 காசுகள் குறைத்துள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, டெல்லியில் 507 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட மானிய எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும். அதேபோல் மானியமில்லாத சிலிண்டர் விலை 133 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு உயர்வு ஆகியவையே விலை குறைப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை