உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் ராணுவ முகாமில் பயிற்சி முடித்த 423 ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவர்களில் 333 பேர் இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். வீரர்களின் அணிவகுப்பை ராணுவ தளபதி ஜெனரல் நாராவனே பார்வையிட்டார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இம்முறை ராணுவ பயிற்சி முடித்த மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பெற்றோர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வீரர்களின் அணிவகுப்பு நேரலையாக ஒளிபரப்பானது. மேலும் வீரர்கள் அனைவரும் முகத்தில் முகக் கவசம் அணிந்தவாறு அணிவகுத்தனர்.