இந்தியா

மகளை கொலை செய்து சடலத்தை எரித்த தந்தை : பட்டியல் இனத்தை சேர்ந்தவரை காதலித்ததால் ஆத்திரம்

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில், பட்டியல் இனத்ததைச் சேர்ந்தவரை காதலித்ததால் பெற்ற மகளை தந்தையே கொன்று சடலத்தை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கொம்மரோலு மண்டலம் நாகிரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சைதன்யா. சைதன்யாவும், இந்திரஜா என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். மகள் இந்திரஜாவின் காதல் குறித்து, அறிந்த அவரது தந்தை அவுலைய்யா, சைதன்யாவை காதலிப்பதை விட்டுவிட வேண்டும் என எச்சரித்துள்ளார். ஆனால் இந்திரஜா காதலை தொடர்ந்ததால், மகளை கொலை செய்து தூக்கில் மாட்டியுள்ளார். பின்னர், மகளின் உடலை, எரித்து கொண்டிருந்ததை, கண்ட கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கொம்மரோலு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?