இந்தியா

Andhra | சாலையில் கவிழ்ந்த பீர் லோடு லாரி - போட்டி போட்டு அள்ளிச் சென்ற மக்கள்

Andhra | சாலையில் கவிழ்ந்த பீர் லோடு லாரி - போட்டி போட்டு அள்ளிச் சென்ற மக்கள்

thanthitv

சாலையில் கவிழ்ந்த பீர் லோடு லாரி - போட்டி போட்டு அள்ளிச் சென்ற மக்கள் #Andhra #lorry #accident #thanthitv ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில், பீர் பாட்டில்கள் ஏற்றிச் சென்ற லாரி சாலையோர கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து 1,900 பெட்டி கிங்ஃபிஷர் பீர் ஏற்றிச் சென்ற லாரி, ஆகிரிபல்லி மண்டலம் எஸ்ஏ பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பீர் பாட்டில்கள் சாலையில் சிதறின. ஏராளமான பாட்டில்கள் உடைந்து பீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கிடையே, உடையாமல் இருந்த பாட்டில்களை அப்பகுதி மக்களும், அவ்வழியாகச் சென்றவர்களும் அள்ளிச் சென்றனர். தகவலறிந்து வந்த போலீசார், பாட்டில்களை எடுத்துச் சென்றவர்களை விரட்டியடித்து, லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

Breaking | Nellai | TASMAC | கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள் | மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

CM Vijay Roadshow | Erode | ஸ்பாட் குறிச்சாச்சு - CM விஜய் ரோடு ஷோ கன்ஃபார்ம்

Kolathur | கொளத்தூர் ஹாஸ்பிடலில்.. தப்பிய நபரை தூக்கிய போலீசார்

Breaking | Cyclone Murasu | Chennai Rains | உருவானது `முரசு' | சென்னையில் மழை எப்படி இருக்கும்?

CM Vijay | அடுத்தடுத்து CM விஜய்.. அதிரும் அரசியல் களம்