அம்மா கல்வியகம் சார்பில் நீட் தேர்வுக்கான இலவச ஆன்லைன் வகுப்புகள் இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்தி கொள்ள www.ammakalviyagam.in என்ற இணைய தளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று அம்மா கல்வியகம் செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
அம்மா கல்வியகத்தின் இலவச நீட் தேர்வு கையேட்டை பதிவிறக்கம் செய்து 63 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளதாகவும், நீட் தேர்வில் 2 ஆயிரத்து 705 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள, அம்மா கல்வியகம், நெல்லையை சேர்ந்த ஹரிஹரன் என்ற மாணவர் 545 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.