இந்தியா

Assam| Hindi|Official மொழியாக சேர்க்கப்பட்டது `இந்தி’ - `இந்த’ சட்டசபைல MLA-க்கள் இந்திலயே பேசலாமாம்

thanthitv

அசாம் சட்டமன்றத்தில் அலுவல் மொழியாக இந்தி சேர்ப்பு ​ இன்று தொடங்கவுள்ள அசாம் சட்டமன்றத்தின் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில், சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி மொழியும் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ரஞ்ஜித் குமார் தாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது ​ இதன் மூலம், இதுவரை அசாமி, ஆங்கிலம் மற்றும் போடோ ஆகிய மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இனி சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தியிலும் தங்களது உரைகளை நிகழ்த்த முடியும். ​ சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பும் 'ஏ.எல்.ஏ' தொலைக்காட்சி சேனல், நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபா டிவிக்களுக்கு இணையாகத் தரம் உயர்த்தப்பட்டு 'அசாம் விதான் சபா டிவி' என மறுபெயரிடப்படுகிறது. ​ ஜூலை 31 வரை நீடிக்கும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மாநிலத்தின் 2026-27 நிதியாண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை புதிய நிதியமைச்சர் ஜெயந்த மல்லா பருவா வரும் ஜூலை 10ம் தேதி தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரில் நிர்வாகச் சீர்திருத்தங்கள் சார்ந்த 10 புதிய சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்