இந்தியா

மேலும் 51, 667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 18-வது நாளாக 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்து 2 புள்ளி ஒன்பது எட்டு சதவீதமாக உள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 18-வது நாளாக 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்து 2 புள்ளி ஒன்பது எட்டு சதவீதமாக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்றைய தினம், 51 ஆயிரத்து 667 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 445ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 329 பேர் இறந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு மூன்று லட்சத்து 93 ஆயிரத்து 310ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 64ஆயிரத்து 527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்திற்கும் கீழ் குறைந்து 6 லட்சத்து 12ஆயிரத்து 868ஆக இருக்கிறது.

இதுவரை 30 கோடியே 79 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்