இந்தியா

துரத்தும் அபாய வைரஸ்..திடீரென அட்மிட்டான 20 மாணவிகள்.. அலர்ட்டா இருங்க மக்களே!

தந்தி டிவி

கண்ணூர் மாவட்டத்திலுள்ள தலச்சேரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சலுடன் உடல் வலி, தோல் அரிப்பு உள்ளதால் அவர்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. தலச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த 11 மாணவிகள், பரியாரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையே, தலச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் என 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலச்சேரியில் பள்ளி மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்