அஜித்-சிவா கூட்டணியில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று, பிற்பகல் 1.30 மணிக்கு வெளியாகிறது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.