சினிமா

இலவச பொருட்களை உடைக்கும் விஜய் ரசிகர்கள்...

அரசின் விலையில்லா பொருட்களான லேப் டாப்கள், மிக்சிக்கள் போன்றவற்றை தீயிட்டு எரித்து, உடைத்து வரும் விஜய் ரசிகர்கள்.

தந்தி டிவி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார் சர்கார் திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் சில காட்சிகள் ஆளும் அதிமுக அரசை விமர்சிப்பது போல் உள்ளதாக புகார்கள் எழுந்தது. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கு அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் திரையரங்குகளை முற்றுகையிட்டு சர்கார் திரைப்படத்தின் பேனர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் இந்த சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என பல அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டதையடுத்து நேற்று அந்த காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டு மறு தணிக்கை செய்யப்பட்டது. விஜய் ரசிகர்கள் மீது தமிழகம் முழுவதும் அனுமதியின்றி பேனர் வைத்ததாகவும், போஸ்டர் ஒட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் 90க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு போட்டியாக, அரசின் இந்தப்போக்கினை கண்டு கொதிப்படைந்த சில விஜய் ரசிகர்கள் #OruViralPurtchi என்ற ஹேஸ் டேக்-ஐ பயன்படுத்தி தங்களின் வீடுகளில் உள்ள அரசின் விலையில்லா பொருட்களான லேப் டாப்கள், மிக்சிக்கள் போன்றவற்றை தீயிட்டு எரித்தும், உடைத்தும் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

விஜய் ரசிகர்களின் இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

MK Stalin | CPM | தாராபுரத்தில் ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு | CPM சண்முகம் சொன்ன வார்த்தை

Nestle | Milk Powder | Nestle பால் பவுடர் யூஸ் பண்றீங்களா | பேரிடியை இறக்கிய FSSAI

veeramani | pocso பாய்ந்தது 5வது போக்சோ பூதாகரமாகும் வீரமணி விவகாரம்

BREAKING || அடுத்த கோல்ட் - தங்க வேட்டையாடும் இந்தியா வீரர்கள்... அதிரும் பதக்க பட்டியல்

MKStalin | TVK | பிரசாரத்தில் உருவ கேலி விவகாரம் | ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்