சினிமா

'வணங்கான்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

தந்தி டிவி

பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் படம் 'வணங்கான்'. இதனை பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் ரோசினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஏற்கனவே இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது வணங்கான் பட இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அருண்விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோ உடன் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரானது வருகிற ஜூலை 8ஆம் தேதி வெளியாவதாவ அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. இந்த அப்டேட்டை நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்