சினிமா

புதுச்சேரியில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

புதுச்சேரியில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

thanthitv

Puducherryயில் அதிர்ச்சியூட்டும் சாலை விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த கேசவன் என்ற பொறியியல் கல்லூரி மாணவர், தனது நண்பர் மனோஜுடன் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.

ரெட்டியார்பாளையம் பவழக்காரன் சாவடி அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கேசவன் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொருபுறம் விழுந்த மனோஜ் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

இந்த கோர விபத்தின் பதபதைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

=====

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் பொறியியல் மாணவர் உடல் மீது பேருந்து ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழக்கும் பதபதைக்கும் சிசிடிவி சாட்சியில் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி,லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன். ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் கேசவன்(20), அரியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தனது நண்பரான பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

அப்போது வாகனத்தை மனோஜ் ஓட்டியுள்ளார். பின்புறம் கேசவன் அமர்ந்து சென்ற போது இரு சக்கர வாகனம் ரெட்டியார் பாளையம்,பவழக்காரன் சாவடி அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மோதியதில் நிலை தடுமாறி கேசவன் சாலையிலும்,மனோஜ் மறுபுறமும் விழுந்துள்ளார்.

இந்நிலையில் சாலையில் விழுந்த கேசவனின் உடல் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்தின் சக்கரம் ஏரி இறங்கியதில் கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக மறுபுறம் விழுந்த மனோஜ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்நிலையில் இந்த கோர விபத்து குறித்த பதபதைக்கும் சிசிடிவி சாட்சியில் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது."

DMK | VCK | A.Raja | பரபரப்பில் MP ஆ.ராசா வீடு

#BREAKING || CM Vijay | Trichy | "விரைவில்.." - CM விஜய் எடுத்த முடிவு

PM Modi | `கொதிக்கும்’ விவகாரம் - திடீரென நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Amit Shah | CM Vijay | சந்திக்கிறார் CM விஜய்.. நேரம் ஒதுக்கிய அமித்ஷா

AIADMK | EPS |தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை? "அதிமுக எதிர்காலம் கேள்விக்குறியாகும்.."-துரை கருணா