சினிமா

நடிகை திரிஷாவுக்கு எதிரான மேல்முறையீடு மனு தள்ளுபடி

நடிகை திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட 1 புள்ளி 16 கோடி ரூபாய் அபராதம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தந்தி டிவி

2010-11ஆம் நிதியாண்டில் உண்மையான வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகை திரிஷாவுக்கு 1 கோடி 16 லட்சம் ரூபாய் வருமான வரித்துறை அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நடிகை திரிஷா முறையிட்டார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், திரிஷாவுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து வருமான வரித்துறை முதன்மை ஆணையர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, அபராதம் ரத்து செய்த உத்தரவு செல்லும் எனக் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு