சினிமா

'வதந்தி' பரப்பும் ஆசாமிகளுக்கு 'வார்னிங்' கொடுத்த சிம்ரன்!

தந்தி டிவி
• நடிகை சிம்ரன், விஜயை வைத்து படம் தயாரிக்க கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் பரவி வந்த கருத்துக்கு சிம்ரன் பதிலடி கொடுத்துள்ளார். • "உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒருவரைப் பாதிக்கும் படியாக சிலர் எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதை பார்க்கையில் மனவருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ள சிம்ரன், இதுவரை தான் எந்த பெரிய கதாநாயகர்களுடனும் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டதில்லை எனவும், வாய்ப்புகள் வந்த போது மட்டுமே நடித்ததாகவும் தெரிவித்துள்ளார்... சமூக வலைதளங்களில் தன் பெயரை, வேறு ஒருவருடன் இணைத்து பேசுவதைப் பல ஆண்டுகள் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்ததாகவும், ஆனால், சுயமரியாதை என்பது எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்துள்ள சிம்ரன்... 'Stop' என்பது பவர்ஃபுல்லான வார்த்தை... அதை இப்போது பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்... இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை இத்தோடு நிறுத்த வேண்டும் என எச்சரித்த சிம்ரன், இங்கு யாரும் நமக்கு ஆதரவாக நிற்கப் போவதில்லை எனும்போது நாம் தான் நமக்காக குரல் கொடுத்தாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்... சினிமாத் துறையில் நேர்மை இருக்க வேண்டும் என்று கூறியுள்ள சிம்ரன் தன்னைப் பற்றி பொய்யான வதந்திகளைப் பரப்புபவர்கள் தன்னிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Iranwar ``ஒன்னுமே மிஞ்சாது பாக்குறீங்களா.. காட்டவா’’ - ஈரானுக்கு எதிராக அதிஉச்ச முடிவெடுத்த டிரம்ப்

TN New Governor | விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவி.. பொறுப்பேற்கும் புதிய ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா்

Guduvanchery Family | கொசுவர்த்தியால் விபரீதம் - கணவன், மனைவி, குழந்தை மூவரும் கோர பலி

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."