மாநாடு படத்திற்காக நடிகர் சிம்பு மேற்கொண்டு வரும் உடற்பயிற்சி காணொலியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு கதாதாநாகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்சன், முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், இந்த படத்துக்காக நடிகர் சிம்பு மேற்கொண்டு வரும் உடற்பயிற்சி காணொலியை, அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.