கடல் திரைப்படம் மூலம் தனது குரலால் ரசிகர்களை வசிகரித்தவர் சித் ஸ்ரீராம்...இருப்பினும் அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடகராக சித் ஸ்ரீராம் மாறியது, "தள்ளிப் போகாதே பாடலுக்கு..." பிறகு தான்... இதனைத் தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் பாடி, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகராகிவிட்டார் சித் ஸ்ரீராம். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் பாடியுள்ள சித் ஸ்ரீராம், அங்கும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இல்லாமல் இசைத் துறையில் தம்மால் இவ்வளவு பெரிய வளர்ச்சி சாத்தியமாகியிருக்காது என்று கூறும் சித் ஸ்ரீராம், பல மொழிகளில் பாடினாலும் தமிழ் தான் பிடித்த மொழி என்கிறார்.
இந்நிலையில், தமிழக ரசிகர்களுக்காக வரும் பிப்ரவரி 8 ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 'ALL LOVE NO HATE ' எனும் தலைப்பில் இசைக் கச்சேரியை சித் ஸ்ரீராம் நடத்த உள்ளார். எஸ்.பி. பாலசுப்பிரமணியன், ஏசுதாஸ், ஹரிஹரன் வரிசையில் சிம்மாசனம் போட்டு ரசிகர்கள் மனதில் சித்ஸ்ரீராமும் அமர்ந்துள்ளார் என்பது நிதர்சன உண்மை.