சினிமா

``படுக்கைக்கு மறுத்ததால்.. பலாத்காரம் செய்ய கூட்டாக பாய்ந்த பிரபலங்கள்’’ - பிரபல நடிகை

தந்தி டிவி

படுக்கைக்கு மறுத்ததால்.. பலாத்காரம் செய்ய கூட்டாக பாய்ந்த பிரபலங்கள்’’ - 28 பெயர்களை அடுக்கிய பிரபல நடிகை

படுக்கைக்கு செல்ல மறுத்ததால் பட வாய்ப்பை இழந்ததாக இயக்குநர் தயாரிப்பாளர் மீது நடிகை சர்மிளா குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

1997ல் அர்ஜுனன் பிள்ளையும் அஞ்சு மக்களும் என்ற ஒரு மலையாளப் படத்தில் நடித்த போது கேரளாவில் இருந்த ஒரு ஓட்டலில் தன் உதவியாளர்களுடன் தான் தங்கி இருந்ததாகவும்... அப்போது அந்தப் படத்தின் தயாரிப்பாளரான எம்.பி.மோகனன், தயாரிப்பு மேனேஜர் சண்முகன் மற்றும் அவர்களது நண்பர்கள் சிலர் தன்னுடைய அறைக்குள் திடீரென புகுந்து கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்... இதனால் அதிர்ச்சியடைந்து நொடிப்பொழுதில் அந்த அறையிலிருந்து தப்பிச்சென்று ஓட்டல் வரவேற்பாளரிடம் புகார் கூறியும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை என சர்மிளா குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

அங்கு வந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர் தான் தன்னைக் காப்பாற்றியதாகவும்... தனது பெண் உதவியாளர் உட்பட சில நடிகைகள் அந்த கும்பலிடம் சிக்கிக் கொண்டதாகவும் சர்மிளா குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பிரபல இயக்குநரான ஹரிஹரன் என்பவர் பரிணயம் என்ற படத்திற்காக தன்னை அணுகிய போது அவர் படுக்கைக்கு அழைத்ததாகவும்... தான் முடியாது என கூறியதால் அந்தப் படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்... வேறு எந்த மொழியிலும் இதுபோன்ற மோசமான அனுபவங்கள் தனக்கு ஏற்பட்டதில்லை என்று தெரிவித்துள்ள சர்மிளா

தனக்கு ஒரு மகன் இருப்பதால் தற்போது போலீசில் புகார் செய்ய விரும்பவில்லை என கூறியுள்ளார்... நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என 28 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் சர்மிளா.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை