சினிமா

சமூக வலை தளத்தில் மாளவிகா, ரீமாசென் புதிய புகைப்படம்

நடிகை மாளவிகா மற்றும் ரீமாசென் ஆகியோரின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

தந்தி டிவி

நடிகை மாளவிகா மற்றும் ரீமாசென் ஆகியோரின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலை தளத்தில் பரவி வருகிறது. 2001-ல் "மின்னலே" படத்தில் அறிமுகமான ரீமாசென் "தூள், செல்லமே, திமிரு, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன்" என்று பல ஹிட் படங்களில் நடித்தார். அதன்பிறகு ஷிவ்கரன் சிங் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. நடிகை மாளவிகா 1999-ல் "உன்னைத்தேடி" படத்தில் அறிமுகமாகி "ஆனந்த பூங்காற்றே, ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, குருவி" என்று பல படங்களில் நடித்தார். 'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்' பாடலுக்கு மாளவிகா ஆடிய நடனம் பரபரப்பாக பேசப்பட்டது. 2009-ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ரீமா சென்னும், மாளவிகாவும் திடீரென்று சந்தித்தனர். அப்போது இருவரும் எடுத்த புகைப்படங்கள், சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு