சினிமா

அனிருத்தை ட்ரோல் செய்துவரும் இணையவாசிகள்...

தந்தி டிவி

ராக்ஸ்டார் அனிருத்தின் பாடல்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாய் இருப்பதாக கூறி இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

திரும்பிய பக்கமெல்லாம் அனிருத் இசைதான்..

அந்தளவுக்கு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக இருக்கும் அனிருத், ரசிகர்களை தன் பாடல்கள் மூலம் தொடர்ந்து வைப் மோடிலே வைத்து வருகிறார்....

வேட்டையன், கூலி, தேவாரா, குட் பேட் அக்லி என அனிருத் இசையில் வெளியாக இருக்கும் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன...

பாடல்கள் ஒரே மாதிரியாய் இருப்பதாக கூறி வைரலாகும் மீம்ஸ்கள்

அண்மையில், வெளியான ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படத்தில் இருந்து பத்தவைக்கும் பார்வைக்காரா பாடலும் , ரஜினியின் வேட்டையன் படத்திலிருந்து மனசிலாயோ பாடலும் பெரும் வரவேற்பை பெற்றது...

அதே சமயம் இது அதுல்ல.. என்று வழக்கம்போல் காப்பி கட் பேஸ்ட் சர்ச்சையிலும் சிக்கியது...

இந்நிலையில் தற்போது, ஹன்டர் வன்டர் பாருடா என்ற வேட்டையன் படத்தின் இரண்டாவது பாடலும், இதே அனிருத் இசையில் வெளியான தேவாரா பாடலும் ஒரே மாதிரியாய் இருப்பதாக கூறி இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்...லியோ, தேவாரா, வேட்டையன் என 3 படங்களிலும் ஒரே மாதிரியான இசையில் சற்றும் வேறுபாடு இல்லாமல் பாடல்கள் இருப்பதாக கூறி அனிருத்தை இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்

Karalam | Sabarimala | சபரிமலை கோயிலில் அதிர்ச்சி.. உறைந்து நின்ற பக்தர்கள்

Breaking | Actress Gowthami | ED Raid | நடிகை கெளதமியின் பகீர் புகார் | அதிரடியில் இறங்கிய ED

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..