சினிமா

அழகுக்காக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா நயன் தாரா ?

தந்தி டிவி

தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவை சுற்றி சர்ச்சைகள் வலம் வந்து கொண்டே தான் இருக்கும்...

பல சர்ச்சைகளை கடந்து திரைத்துறையில் வேரூன்றியிருக்கும் நயன்தாரா, 40 வயதை எட்டியும் இளமையான தோற்றத்துடனே இருக்கிறார்...

இந்த இளமையான தோற்றத்திற்காக, சமந்தா, அதிதிராய் ஹைதாரி போன்று நடிகை நயன் தாராவும் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக பரவலான கருத்து இருந்தது..

அதிலும் நயன்தாராவின் முந்தைய படங்களில் உள்ள புகைப்படங்களையும், தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு பலர் விமர்சனத்தை முன் வைத்து வந்தனர்..

இந்த விமர்சனங்கள் குறித்து பெரிதும் கண்டுகொள்ளாத நயன்தாரா, தற்போது இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தனது பிசினஸ் ப்ரமோஷனுக்கான நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது முகத்தில் அழகுக்காக இதுவரை எவ்வித சர்ஜரியும் செய்ததில்லை என்றும் தான் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக சொல்வதில் உண்மையில்லை என விளக்கியுள்ளார்.

அதே வேளையில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்வதில் எவ்வித தவறும் இல்லை என பேசிய அவர், டயட் காரணமாகவே தனது முகத்தில் மாற்றங்கள் உள்ளதாகவும், தன்னை கிள்ளலாம், எரிக்கலாம்.. எதுவுமே ப்ளாஸ்டிக் இல்லை என பதிலளித்துள்ளார்.

நீண்ட நாட்களாக திரைத்துறை வட்டாரத்தில் உலவி வந்த விமர்சனத்திற்கு ஒற்றை வீடியோவில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை நயன்தாரா..

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி