வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்க உள்ள திரைப்படம் "மூக்குத்தி அம்மன்". காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தில் 4 இசையமைப்பாளர்கள் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், இதுவரை இசையமைப்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.